தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தளர்வுகளுடன் பல கட்டங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி கல்லூரிகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்னன. இதனையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கவில்லை. மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜூலை 23-ந்தேதி அறிவித்தார். ஆனால் யூ.ஜி.சி. கல்லூரி இறுதித் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதில் பிடிவாதமாக உள்ளது.
இந்நிலையில், தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலன் கருதி, தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர மற்ற செமஸ்டர்
தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணாக்கர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.