2 வீலரில் காதலியோடு ஜல்சாவாக சுற்ற பைக் கேட்டு அடம்... தந்தை மறுத்ததால் மாணவன் தூக்கிட்டு சாவு.!



sengalpatu-boy-suicide-for-bike

காதலியை அழைத்து செல்வதற்காக இருசக்கர வாகனம் வாங்கித் தருமாறு, கூலி வேலை பார்க்கும் தந்தையிடம் அடம்பிடித்த கல்லூரி மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில் பாரதியார் தெருவினைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மகன் நாகராஜ் (வயது 19). இவர் செங்கல்பட்டு அருகாமையிலுள்ள ஆத்தூர் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்த நிலையில், இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்த போது, அவரை அழைத்துச் செல்வதற்காக புதிதாக இருசக்கர வாகனம் வாங்கி தரும்படி தனது தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு கன்னியப்பன் 'அன்றாடம் வேலைக்கு போனால் மட்டுமே சாப்பாடு என்ற நமது குடும்பத்தின் நிலைமையை நீ புரிந்து கொள்ளவேண்டும்.

உனது படிப்பு செலவுக்கு பணம் செலவழித்து, கூடவே இருசக்கர வாகனமும் வாங்கினால், அதற்கு அதிக பணம் தேவைப்படும். அத்துடன் பெட்ரோல் போடுவதற்காகவே தனியாக கையில் பணம் வைத்திருக்க வேண்டும். இதனால் இப்போது இருசக்கர வாகனம் வாங்க முடியாது " என அவரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

sengalpatu

ஆனால், மதியிழந்த மகனோ தந்தையின் வருமானத்தையும், குடும்ப சூழ்நிலையிலும் புரிந்துகொள்ளாமல் ஆசைப்பட்ட இருசக்கர வாகனத்தை வாங்க இயலவில்லையே என்ற விரக்தியில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், 'நாம் இருந்து என்ன பயன்? நமக்கு ஒரு இரு சக்கர வாகனம் கூட வாங்கி தர ஆளில்லை' என எண்ணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பின் இது குறித்த தகவலறிந்த காவல்துறையினர் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.