ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பள்ளிகள் திறப்பது உறுதி!! ஆனால் இது கட்டாயமில்லை..!! அமைச்சர் கூறிய முக்கிய தகவல்..
மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தப் படமாட்டார்கள் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா 2 வது அலைக்கு பிறகு தமிழகத்தில் நாளை முதல் 9 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் சுழற்சிமுறையில் திறக்கப்படுகிறது. அதேநேரம் கொரோனா மூன்றாவது அலை குறித்த பயம் மக்கள் மத்தியில் இருப்பதால், பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர், மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நாளை பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பள்ளி ஒன்றில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பெற்றோர், மாணவர்கள் பயப்பட வேண்டாம் எனவும், அனைவருமே பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயமில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், பள்ளி மாணவர்கள் வரும் போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும், மாணவர்கள் அணிந்தவரும் முகக்கவசம் கிழிந்துவிடும் பட்சத்தில் அவர்களுக்கு மாற்று முகக்கவசம் வழங்கும் வகையில், ஒவ்வொரு பள்ளிகளிலும் முகக்கவசம் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், பள்ளிகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கி, அனைத்துப் பள்ளிகளும் மாலை 3.30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.