#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கலைஞரின் உண்மை, உழைப்பு, விசுவாசம், அர்ப்பணிப்பின் அடையாளம் சண்முகநாதன் காலமானார்...!! சோகத்தில் மூழ்கிய திமுகவினர்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளாராக இருந்த கோ.சண்முகநாதன்(வயது 80) காலமானார்.
கோ.சண்முகநாதன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்தார். கருணாநிதியின் நிழல் என்றே அரசியல் வட்டாரத்தில் அழைக்கப்பட்ட சண்முகநாதன், 1967 ஆம் ஆண்டு முதல் கருணாநிதியின் கடைசிக்காலம் வரை உதவியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோ.சண்முகநாதன் உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானர். சற்றும் யோசிக்காமல் சமயோசிதமாக வார்த்தை ஜாலம் விடுக்கும் தலைவரின் ஞானஜாலம் என்றே சண்முகநாதன் அவர்களை திமுகவினர் புகழ்வார்கள். கோ.சண்முகநாதன் மறைவிற்கு திமுகவினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.