அச்சச்சோ எல்லாம் தெரிஞ்சிருச்சா... ஷவர்மா கடை உரிமையாளருடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!



shawarma-shop-owner-attack-for-affair-issue-in-karur

கரூரில் திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஷவர்மா கடை உரிமையாளரை அந்தப் பெண்ணின் உறவினர்கள் புரட்டி எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கரூர் திண்ணப்பா கார்னர் பகுதியில் சிக்கன் ஷவர்மா கடை நடத்தி வந்துள்ளார் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் என்ற நபர். இந்நிலையில் ஈரோடு கொடுமுடியை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளனர். மேலும் அந்த பெண்ணை கரூருக்கு அழைத்தும், சசிகுமார் கொடுமுடிக்கும் சென்று அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இதனை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் சசிகுமார் கடைக்கு வந்து சசிகுமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் ஆத்திரம் தீராமல் கடையிலிருந்து வெளியே இழுத்து வந்து அவரை மேற்குமாட வளாகம் தெரு வழியாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சாலையில் சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் அவரை தரதரவென இழுத்துச்சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.