ஆங்கிலம் படிக்க வரவில்லை... கடிதம் எழுதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி..!!



She didn't come to study English... A student committed suicide by writing a letter..

ஆங்கிலம் எழுத படிக்க வரவில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் புத்தேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் ரஜினிகாந்த் லதா தம்பதியினர். ரஜினிகாந்த் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் சாலபோகம் பகுதியில் புதிய வீடு கட்டி வருவதால், தற்போது புத்தேரியில் வசித்து வருகின்றனர். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். மற்ற இரண்டு மகள்கள் பள்ளியில் படித்து வந்தனர்.

இரண்டாவது மகள் தனிஷியா ப்ளஸ் 1 படித்து வந்துள்ளார்.ஆங்கிலம் தவிர அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் வாங்கி வந்துள்ளார். ஆங்கில வகுப்பில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி, ஆசிரியர் கண்டித்துள்ளார்.பள்ளிக்கு வரும்போது பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வந்து படுக்கை அறையில் சோகமாக இருந்துள்ளார்.

மாலை 6.30 மணி அளவில் வீட்டின் படுக்கையறை கதவு மூடப்பட்டு இருந்ததால், மானவியின் பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மின்விசிறியில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 

உடனடியாக அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் பரிசோதித்து மாணவி உயிரிழந்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் மாணவியின் உடலை  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அறையில் சோதனை செய்ததில் , அவருக்கு வழக்கமாக டைரி எழுதும் பழக்கம் இருந்துள்ளது. இன்று அதில், ஆங்கிலம் சரியாக வராததால் வகுப்பறையில் சக மாணவிகள் முன்பு ஆங்கில ஆசிரியர் திட்டியதாகவும், ஆரம்பத்தில் இருந்து சரியான ஆங்கிலப் பள்ளியில் படித்திருந்தால் இதுபோன்ற நிலை எனக்கு ஏற்பட்டு இருக்காது எனவும், இதனால் ஐ நோ ஹேப்பி எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.மேலும் அக்கா மற்றும் தங்கை நன்றாக படிப்பதால் அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என எழுதியுள்ளார்.