மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எதிர்ப்பை மீறிய காதல் திருமணம்.. காதலனின் தங்கைக்கு நேர்ந்த கொடூரம்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர் சத்தியமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மஞ்சுவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், சுபாஷின் குடும்பத்தினருக்கு அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சுபாஷ் தனது தங்கை ஹாசினியை சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது மஞ்சுவின் தந்தை பிக்கப் வேன் மூலம் சுபாஷின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதில் ஹாசினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுபாஷ்க்கு காலில் காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த ஹாசினி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் தற்போது ஹாசினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மஞ்சுவின் தந்தை மற்றும் அவரது தாய் இருவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.