3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து; "காரணம் இதுவே" - அமைச்சர் பரபரப்பு பேட்டி.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, திருத்தங்கல், செங்கமலபட்டி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில், ஆலைக்குள் பணியாற்றி வந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் தொடருகிறது.
இரங்கலும், நிதிஉதவி அறிவிப்பும்..
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோர் தங்களின் இரங்கலை பதிவு செய்தனர். அமைச்சர் இராமச்சந்திரனும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும் நேரில் சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க: சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து விவகாரம்; உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல்.!
உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு
நேற்று மாலை வெடிவிபத்தில் காயமடைந்தோரின் உடல் பிரேத பரிசோதனை நிறைவுபெற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன், "தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல்பெற்று 2 நாட்களில் இழப்பீடு அறிவிக்கப்படும். முதல்வர் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்.
விபத்துக்கான காரணம் என்ன? அமைச்சர் எச்சரிக்கை..
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான உதவிகள் மாவட்ட நிர்வாகத்தால் கவனிக்கப்படும். இவ்விபத்துக்கு பேராசை மட்டுமே காரணம். பட்டாசு ஆலைகளுக்கான விபத்துகளை முடிவுக்கு கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது. இனி விதியை மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.
இதையும் படிங்க: தொட்டில் கழுத்தில் இறுக்கியதால் சோகம்; உடன்பிறப்புகளுடன் விளையாடிய சிறுவன் மரணம்.. சிவகாசியில் சோகம்.!