யாராவது வாங்க.. கழிவறைக்குள் கேட்ட அழுகுரல்! பதறிப்போய் திறந்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! கலங்க வைக்கும் சம்பவம்!!



son-abandons-95-year-old-mother-in-room-near-toilet

சேலம் அருகேயுள்ள டால்மியா போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராதா. 95 வயது நிறைந்த இவரது கணவர் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். ராதாவுக்கு 4 மகன்கள் இருந்தனர். இதில் இருவர் உயிரிழந்துவிட்டனர். மற்றொரு மகன் எங்கிருக்கிறார் என்பதே தெரியாத நிலையில் அவர் தனது கடைசி மகனான ஸ்ரீதர் என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ஸ்ரீதர் டால்மியா போர்டில் பணிபுரிந்துள்ளார். மேலும் அரசின் சார்பில் ராதாவுக்கு வரும் ஓய்வூதிய தொகையையும் அவரே பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டநிலையில் அனைவரும் சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அண்மையில் திடீரென ஸ்ரீதர் வீட்டின் பின்புற பகுதியிலுள்ள கழிவறையிலிருந்து பெண் ஒருவரின் அழுகுரல் கேட்டுள்ளது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள், அந்த வீட்டின் கதவை தட்டிப்பார்த்துள்ளனர். ஆனால் யாரும் திறக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் சேலத்தில் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் நடத்தி வரும் போதிமரம் என்ற தொண்டு நிறுவன நிர்வாகிகள் அங்கு சென்று கழிவறை கதவை திறந்து பார்த்துள்ளனர். அங்கு உணவின்றி, தண்ணீரின்றி ராதா உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.

95 years

தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பெற்ற மகனே மூதாட்டியை கழிவறையில் தங்க வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் தாயை சரியாக கவனித்துக் கொள்வதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் ராதாவை மீட்டு முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். மேலும் அவருக்குத் தேவையான உதவிகளையும் செய்துள்ளனர். இந்த சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.