பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கள்ளத்தொடர்பில் இருந்த அம்மா... மகன் கொலை முயற்சி... இருவரை கைது செய்த காவல் துறை.!.
விருதுநகர் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பில் இருந்த தாயை மகன் தனது நண்பருடன் சேர்ந்து தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்தப் பெண்மணியின் மகன் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி ஆனந்தி, இந்த தம்பதியினருக்கு சந்தோச ராஜா என்ற மகன் இருக்கிறார். குடும்ப பிரச்சினை காரணமாக பிச்சை மற்றும் ஆனந்தி இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களது மகன் சந்தோச ராஜா தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.
ஆனாலும் தாயை அடிக்கடி சந்தித்து பேசி விட்டு சென்றிருக்கிறார். இந்நிலையில் கணவனை பிரிந்து வாழும் ஆனந்திக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை கைவிடுமாறு சந்தோச ராஜா பலமுறை கூறியும் ஆனந்தி கேட்பதாக இல்லை. இதனால் தனது தாயின் மீது ஆத்திரத்தில் இருந்திருக்கிறார் சந்தோச ராஜா.
இந்நிலையில் தனது நண்பர் துரைப்பாண்டி என்பவரை அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்ற சந்தோச ராஜா அவரது தாயை அரிவாள் மற்றும் கம்பியால் சராமாறியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த ஆனந்தியின் குரலை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எலுமிச்சம் போகும் தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சந்தோச ராஜா மற்றும் துரைப்பாண்டி ஆகியோரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.