மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆத்திரத்தில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகன்... ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த மாமியார்...!!
மனைவிக்கு பரிந்து பேசிய மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள பெத்திக்குப்பம் பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் கல்யாணி (60). இவரது மகள் கஸ்தூரி, மருமகன் குப்பன் (47). கஸ்தூரிக்கும் அவரது கணவர் குப்பனுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுவந்ததால், கஸ்தூரி அருகாமையில் இருக்கும் தனது தாயார் கல்யாணியின் வீட்டிற்கு சென்று தங்கி விடுவது வழக்கமாக இருந்துள்ளது.
இன்றும் வழக்கம் போல ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தாயார் கல்யாணியின் வீட்டில் கஸ்தூரி சென்றுள்ளார். கஸ்தூரியை தேடி அங்கு வந்த குப்பனுக்கும் மாமியார் கல்யாணிக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குப்பன் கையில் வைத்திருந்த கத்தியால் கல்யாணியை குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த கல்யாணி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். கல்யாணியை, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரது மகள் கஸ்தூரி கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கல்யாணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கல்யாணியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கும்மிடிப்பூண்டி காவல்துறையினர், குப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.