மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மது போதையில் தகராறு செய்த தந்தை அடித்தே கொன்ற மகன்.!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பனங்காட்டு பாளையத்தை சேர்ந்தவர் பாபு. கூலித் தொழிலாளியான இவருக்கு வசந்தாமணி என்ற மனைவியும் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வரும் நிலையில், மகன் சதீஷ்குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட சதீஷ், பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால் தனது மனைவியுடன் சத்தியமங்கலத்தில் வசித்து வந்துள்ளார். இதில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான தந்தை பாபு தினமும் குடித்துவிட்டு வந்த தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பாபு குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்த நிலையில், சதீஷ்குமார் தந்தையை தட்டி கேட்டுள்ளார். அப்போது பாபு அசிங்கமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் கல்லால் தந்தையை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.