விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளா! பள்ளிக்கல்வித்துறை விடுத்த அதிரடி அறிவிப்பு!



special-classes-not-held-in-corono-holidays

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது.  இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருவர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி,  கல்லூரிகள் அனைத்திற்கும் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Special class

இந்நிலையில் பள்ளிகள் மூடப் பட்டிருந்தாலும், சில பள்ளிகளில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளில்  ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், கொரோனா முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிறப்பு வகுப்புகள் எடுக்க எந்த பள்ளிகளுக்கும் அனுமதி இல்லை. எனவே சிறப்பு வகுப்புகளை எடுக்க கூடாது. அதனையும் மீறி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.