மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: தமிழ்நாடு வேளாண் பல்கலை.,க்கு ரூ.530 கோடி நிதி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு.!
கிருஷ்ணகிரி தென்னை, பன்னீர் ரோஜா, சாத்தூர் வெள்ளரி உட்பட 10 பொருட்களுக்கு புவிசாரி குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், உழவன் செயலின் பயன்பாடுகள் மேம்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2023 - 24ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் பேசியவை பின்வருமாறு,
1.32 ஹெக்டேர் நிலங்கள் நீர் பெற, பாசன வசதிகளை உறுதிப்படுத்தி, கடைமடை பகுதிகளுக்கு நீர் சென்று சேர்வதை உறுதி செய்ய தூர்வாரும் பணிக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 100 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை புதுப்பிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உழவன் செயலின் மூலமாக விவசாயிகள், விவசாய இயந்திரங்கள் வைத்திருப்போர், அதனை பராமரிப்போர் தொடர்பான விபரங்கள் தெரிவிக்கப்படும். இவை மாவட்ட வாரியாக இருக்கும் என்பதால், விவசாயிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை எளிதில் பெற வழிவகை செய்யப்படும்.
1971 ல் கலைஞர் கருணாநிதி தொடங்கிய வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ரூ.530 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நிரந்தர மூலதன வைப்பு நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும். கோவையில் பல்கலை., தாவரவியல் பூங்காவை சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கிள்ளிகுளம் வேளாண் கல்லூரிக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்து, வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். கோவை வேளாண் பல்கலை.,யில் பூச்சி ஆராய்ச்சிக்காக ரூ.3 கோடி செலவில் மையம் அமைக்கப்படும்.