தடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடைபோடுவது வேதனை! தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.



tamilnadu bjp leader tal;k about vinayagar chathurthi

தமிழகத்தில் வரும் 22ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதையொட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வீதிகளில் சிலை அமைத்தல், ஊர்வலம் செல்லுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. மக்கள் அவர்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், விநாயகர் சிலைகளை நிறுவி, சமூக இடைவெளியோடு மக்கள் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாநில அரசு சிறு கோயில்களை எல்லாம் திறந்து கடவுளை வழிபடுவதற்கு அனுமதி அளித்துள்ளது. 

vinayagar chathurthi

இத்தகைய நிலையில் விநாயகர் சிலை நிறுவி வழிபடுவதற்கு மட்டும் தடை என்பதை நீக்க வேண்டும். இந்து மக்கள் அவரவர் குடும்பம் மற்றும் தொழில்களில் ஏற்படும் தடைகள் நீங்கிட விநாயகரைத் தான் வணங்குவார்கள். அதனால்தான் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் முதலில் பிள்ளையார் வைத்து கும்பிடுவது வழக்கமான ஒன்றாகும்.

தடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடைபோடுவது வேதனை அளிக்கக்கூடியது. எனவே விநாயகர் சதுர்த்தி கால சிறப்பு வழிபாட்டை தமிழ்நாடு அரசு அனுமதிப்பது குறித்து, மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்