மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட் சூட் அணிந்து வந்தது ஏன்.? என்ன காரணம் தெரியுமா.?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போதும், எங்கு சென்றாலும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை மட்டுமே அணிந்து கொண்டு எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் செல்வது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகம் மையத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கோட் சூட் அணிந்து பங்கேற்றார்.
இது குறித்து அவர் பேசிய போது நான் தமிழகத்தில் எந்த ஒரு பகுதிக்கு சென்றாலும் கோட் சூட் அணிந்தது கிடையாது. வெளிநாடுகளுக்கு செல்லும் போது மட்டுமே கோட் சூட் அணிந்துள்ளேன். ஆனால் இங்கு கோட் சூட் அணிந்து வந்ததற்கு இது தான் காரணம் என பேசியுள்ளார்.
அதாவது இங்கு எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்ட காரணத்தால் இங்கே நான் கோட் சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக இருக்கும். இன்று காலையிலிருந்து சென்னையில் மழை பெய்து வருகிறது. நான் இங்கே வந்தவுடன் முதலீடு மழையாக பெய்யும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது என்று பேசியுள்ளார்.