கவலை வேண்டாம்... இன்று மாலைக்குள் வந்துவிடும்.. தமிழக மக்களுக்கு இன்ப செய்தியை அறிவித்த அரசு...



Tamilnadu government announced Good news about vaccine

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவியதை அடுத்து கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு மற்றும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது அமலில் இருந்து வருகிறது. கொரோனா பரவல் அதிகமாகி கொண்டே வருவதால் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

Vaccine

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மக்களுக்கு இன்ப செய்தி அளிக்கும் வகையில் 4,26,270 கொரோனா தடுப்பூசிகள் இன்று விமானம் மூலம் சென்னை வருவதாக மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

அதில் 1,26,270 கோவாக்சின் தடுப்பூசிகள் இன்று காலை 10 மணிக்கும், 3,00,000 கோவிஷில்டு தடுப்பூசிகள் இன்று மாலை 5.20 மணிக்கும் சென்னை வருகிறது.