தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#BigBreaking: ரூ.60 க்கு சென்னை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை; அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு.!
தென்மேற்கு பருவமழையின் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் தக்காளி உட்பட அத்தியாவசிய காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்தின் சந்தைகளிலும் தக்காளியின் விலை கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னையிலும் அதே நிலை தொடருகிறது. பிற காய்கறிகளின் விலையும் உச்சம் அடைந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் நாளை முதலாக ரேஷன் கடையிலேயே தக்காளியின் விலை தொடரும் என்றும், பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படுவது போல, நியாய விலைக்கடையிலும் ரூ.60 க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அமைச்சர் பெரிய கருப்பன் உறுதி செய்துள்ளார்.