தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தமிழக காவல்துறை அதிரடி; புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு விதிமுறைகளுடன் கூடிய தடை உத்தரவு..!
சென்னையில் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நிகழ்ச்சிகள் பொது இடங்களில் நடத்தக் கூடாது என தமிழக காவல்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.
வருடா வருடம் டிசம்பர் 31 தொடங்கி ஜனவரி 1 வரை மக்கள் கடற்கரைகள், சுற்றுலாத்தலங்கள், கோவில்கள் போன்ற இடங்களில் கொண்டாடி மகிழ்வர். சென்னை மெரினா பீச்சில் டிசம்பர் 31ல் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவர், குடித்து கும் மாளாமிட்டும், நடு ரோட்டில் வண்டி ஓட்டியும் செல்வர்.
இதனால் நிறைய சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. எப்பொழுதும் காவல்துறை ரோந்து பணியில் இருக்கும். ஆனால் இந்த வருடம் கொரோனா வைரஸ் காரணமாக மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் புத்தாண்டு கொண்டாடுவோர், பொது இடங்களில் கூடுவதை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளவும், தங்களது வீடுகளில் இருந்து நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் சேர்ந்து புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். கூடுமானவரை பொது இடங்களில் கூடுவதை தவிர்த்திடுங்கள்.
புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் பொது இடங்கள், கடற்கரைகள், யாருக்கும் அனுமதி இல்லை. புத்தாண்டின் முதல் நாள் இரவு மது அருந்துவது, கடற்கரைகளில் இறங்கி விளையாடுவது, அதிவேகமாக வண்டிகளை செலுத்துவது, இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த கட்டுப்பாடுகளை மீறினால், கைது செய்யப்படுவீர். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழக காவல்துறை அதிகாரி டிஜிபி திரு சைலேந்திரபாபு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.