தமிழகத்தில் சக்கப்போடுபோடும் வெயில்... சதமடித்து சுட்டெரித்ததால் மக்கள் பரிதவிப்பு.!



Tamilnadu Summer Season Heat Wave

தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே சுட்டெரித்து வரும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி அளவை தாண்டி பதிவாகி வருகிறது. 

நேற்று ஒரேநாளில் 6 க்கும் மேற்பட்ட இடங்களில் வெயிலின் தாக்கமானது அதிகரித்து, அங்கு 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையமும் 2 நாட்களுக்கு வெளியில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி அதிகமாகலாம் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நேற்று பதிவான வெப்ப அளவுகள் பின்வருமாறு: சென்னை நுங்கம்பாக்கத்தில் 94.64 டிகிரி (34.8 செல்சியஸ்) என்ற அளவிலும், மீனம்பாக்கத்தில் 98.6 டிகிரி (37 செல்சியஸ்) என்ற அளவிலும், கோயம்புத்தூரில் 97.16 டிகிரி (36.2 செல்சியஸ்) என்ற அளவிலும், குன்னூரில் 77 டிகிரி (25 செல்சியஸ்) என்ற அளவிலும், 

tamilnadu

கடலூரில் 96.08 டிகிரி (35.6 செல்சியஸ்) என்ற அளவிலும், தர்மபுரியில் 98.96 டிகிரி (37.2 செல்சியஸ்) என்ற அளவிலும், ஈரோட்டில் 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்) என்ற அளவிலும், கன்னியகுமார்யில் 92.84 டிகிரி (33.8 செல்சியஸ்) என்ற அளவிலும், கரூரில் 104.9 டிகிரி (40.5 செல்சியஸ்) என்ற அளவிலும், கொடைக்கானலில் 68 டிகிரி (20 செல்சியஸ்) என்ற அளவிலும், 

மதுரையில் 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்) என்ற அளவிலும், நாகப்பட்டினத்தில் 93.2 டிகிரி (34 செல்சியஸ்) என்ற அளவிலும், நாமக்கல்லில் 99.5 டிகிரி (37.5 செல்சியஸ்) என்ற அளவிலும், சேலத்தில் 99.68 டிகிரி (37.6 செல்சியஸ்) என்ற அளவிலும், தஞ்சாவூரில் 98.6 டிகிரி (37 செல்சியஸ்) என்ற அளவிலும், திருச்சியில் 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்) என்ற அளவிலும், தொண்டியில் 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்) என்ற அளவிலும், 

தூத்துக்குடியில் 89.96 டிகிரி (32.2 செல்சியஸ்) என்ற அளவிலும், ஊட்டியில்  71.42 டிகிரி (21.9 செல்சியஸ்) என்ற அளவிலும், வேலூரில் 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்) என்ற அளவிலும் பதிவானது.

பொதுநலன்: வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் இயற்கையான பானங்களை அருந்த வேண்டும் இளநீர், பழச்சாறுகள், கூழ் போன்றவற்றை அடிக்கடி பருகுவது நல்லது.