மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனி தியேட்டரிலும் ஐ.பி.எல் ஆட்டங்களை பார்க்கலாம்? - திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதிரடி கோரிக்கை.!
சமீபத்தில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர், திரையரங்குகளின் கட்டணத்தை உயர்த்தக்கூறி கோரிக்கை வைத்திருந்தனர். இதற்கான மாதிரி கட்டண வசூல் அறிவிப்பும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், "திரையரங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் என்பது பிற மாநிலத்தை போல தமிழ்நாட்டிலும் வசூல் செய்ய அனுமதி வேண்டும்.
திரையரங்கில் வர்த்தக ரீதியிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வேண்டும். மின்சாரம் மற்றும் சொத்து வரி போன்றவற்றை திரையரங்குக்கு குறைந்து வசூல் செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாது உலக அழகிப்போட்டி, ஐ.பி.எல் ஆட்டங்கள் போன்றவற்றை பொழுதுபோக்கு அம்சமாக திரையிட அனுமதி வழங்க வேண்டும்" என பல்வேறு கோரிக்கையை முன்வைத்தனர்.