பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை நிச்சயம்! சென்னையில் என்றைக்கு மழை பெய்யும் தெரியுமா?
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை மழை பெய்யும் என தமிழ்நாடு வெதெர்மன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில் புதிய கிழக்கு திசை காற்று உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று விரைவில் தமிழகத்தில் கரையை கடக்கலாம். இதன் காரணமாக இன்று டிசம்பர் 3 முதல் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதெர்மன் தெரிவித்துள்ளார்.
இந்த மழையானது எந்தவிதமான காற்றழுத்த தாழ்வு நிலையாலோ அல்லது புயலினாலோ வருவது இல்லை. எனவே எந்தவித வதந்திகளையும் நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று துவங்கும் இந்த மழையானது காவிரி டெல்டா பகுதிகளில் டிசம்பர் 5ம் தேதி வரை பெய்யும் என்றும் சென்னையில் டிசம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 6ம் தேதியும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் முதலில் மழை பெய்யக்கூடும் என்றும், பின்பு இன்று மாலை அல்லது நாளை காலை சென்னை மற்றும் பாண்டிச்சேரி, கடலூர் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். பின்பு இந்த மழையானது தீவிரமடைந்து தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 5ஆம் தேதி தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்யும். டிசம்பர் ஆறாம் தேதி கிழக்கு கடற்கரை மாவட்டங்கள் மற்றும் நீலகிரி பகுதிகளில் மழை பெய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.