மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்டப் பகலில் பயங்கரம்... ட்ராவல்ஸ் உரிமையாளர் வெட்டி படுகொலை... காவல்துறை தீவிர விசாரணை.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ட்ராவல்ஸ் உரிமையாளர் பட்டப் பகலில் வெற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் முக்கிய குற்றவாளியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் பூபாலன், இவர் சொந்தமாக கார் வைத்து ட்ராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். பூபாலன் தனது குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி வரும்போது எதிரே பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்து இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோகன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக பூபாலனும் சேர்க்கப்பட்டிருக்கிறார். அந்தக் கொலைக்கு பழிவாங்க மோகனின் நண்பர்களான செல்வம், பாலாஜி, நசீர் மற்றும் மதன் ஆகியோர் கஞ்சா போதையில் பூபாலனை வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக செல்வம் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை காவல்துறை தேடி வருகிறது.