தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மிதமிஞ்சிய போதையில் தள்ளாடி வந்த டூ வீலர்.. போதை தெளியும்வரை தண்ணீர் ஊற்றி, எச்சரித்து அனுப்பிய அதிகாரிகள்.!
தஞ்சாவூர் நகரில் உள்ள கீழவாசல் பகுதியில், தஞ்சாவூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கை மற்றும் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அவ்வழியாக வந்தவர்கள் முகக்கவசம் அணிகின்றனரா? தலைக்கவசம் அணிகின்றனா? மதுபோதையில் வருகிறார்களா? என சோதனை நடந்துள்ளது. அப்போது, இருசக்கர வாகனத்தில் ஒருவர் மிதமிஞ்சிய போதையில் தள்ளாடியபடி வாகனத்தை இயக்கி வந்துள்ளார்.
அவரின் வாகனத்தை நிறுத்திய அதிகாரிகள் மதுபோதையில் வந்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பாமலேயே, மதுபான வாடையில் அதனை உறுதி செய்துள்ளனர். இளைஞர் அதிகளவு போதையில் இருந்ததால், மேற்படி விசாரணை செய்ய இயலவில்லை.
அதனால் அவரின் தலையில் தண்ணீர் ஊற்றி போதையை தெளிய வைத்த அதிகாரிகள், அவரின் உறவினருக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறி நேரில் வரச்சொல்லியுள்ளார். நேரில் வந்தவர்களிடம் மதுபோதையில் வாகனம் ஒட்டி வந்தவரை எச்சரித்து, இனி மதுபானம் அருந்தி வாகனம் இயக்க கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.