திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடியினர் காவல் நிலையத்தில் தஞ்சம்: ஒரத்தநாடு அருகே பரபரப்பு..!
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே கிளாமங்கலம் குஞ்சான் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகள் கலைமதி (21). இவரும் பேராவூரணி பகுதியை சேர்ந்த விசித்திரன் (27) என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இருந்த போதும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனியே சந்தித்துக் கொண்ட காதல் ஜோடியினர் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருவதை அறிந்த கலைமதியின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்.
இந்த நிலையில், நேற்று தங்களது வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடியினர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதன் பின்னர் தங்களது பெற்றோர்கள் தங்களை பிரித்துவிடக்கூடும் என்று கருதிய காதல் ஜோடியினர், நேற்று மாலை பாதுகாப்பு கேட்டு ஒரத்தநாடு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.