பள்ளி கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தையின் சடலம்... அதிர்ந்து போன பள்ளி நிர்வாகம்..!



the-dead-body-of-the-boy-was-found-in-the-school-toilet

திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் உள்ள கழிவறையில் பிறந்து சில மணி நேரமான ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பள்ளி கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

School toilet

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.