மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடனை திருப்பி செலுத்தாததால் வீட்டிற்கு பூட்டு.. அவமானத்தால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.!
சென்னையில் வாங்கிய கடனுக்காக வீட்டை பூட்டியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சியாம் சுந்தர்(27). இவருக்கு திருமணம் ஆகி மீனாட்சி என்ற மனைவியும் கனிஷ்கா (4), கயல் (3) மற்றும் கனுஸ்ரீ (1) என 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். ஷியாம் சுந்தர் எழும்பூரில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் லோடுமேன் ஆக வேலை பார்த்து வந்தார்.
இவர் குடும்பச் செலவிற்காக அஸ்கர் அலி என்பவரிடம் 70 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதாகத் தெரிகிறது. இந்தப் பணத்தை நீண்ட நாட்கள் அவர் திருப்பி செலுத்தாததால் அஸ்கர் அலி அடிக்கடி இவரிடம் பணம் பற்றி கேட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பணம் கேட்பதற்காக ஷியாம் சுந்தர் வீட்டிற்கு சென்று இருக்கிறார் அஸ்கர் அலி. அப்போது அவரது வீடு பூட்டி இருந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆஸ்கர் அலி தன்னிடம் இருந்த ஒரு பூட்டால் வீட்டை பூட்டிவிட்டு சென்று இருக்கிறார்.
வெளியே சென்று திரும்பிய ஷியாம் சுந்தரின் மனைவி மீனாட்சி வீட்டில் இரண்டு பூட்டுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக கணவரை பார்ப்பதற்காக எழும்பூர் சென்று இருக்கிறார். அங்கு அவரை காணவில்லை. இதனைத் தொடர்ந்து அஸ்கர் அலியின் வீட்டிற்குச் சென்று குழந்தைகளை வைத்துக்கொண்டு இரவில் வெளியே தங்க முடியாது அதனால் பணத்தை செலுத்துவதற்கு எப்படியாவது ஏற்பாடு செய்கிறேன் எனக்கூறி சாவியை வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு சென்று இருக்கிறார். அங்கு வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே சியாம் சுந்தர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இந்த சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சியாம் சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கில் சரணடைந்த அஸ்கர் அலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.