மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாமனாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகன்!.. கடைத்தெருவில் அட்டூழியம்: வலை விரித்த போலீஸ்..!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள துண்டுகாடு கிராமம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் உஷா. அதே கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் மாயவேல். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு உஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் காதல் தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று, சேகர் துண்டுகாடு கடைத்தெருவுக்கு சென்றுள்ளார். அங்கே சரக்கு வாகனத்துடன் இருந்த சேகரின் மருமகன் மாயவேல் வாகனத்தை ஓட்டி வந்து மோதி அவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சேகர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இதன் பின்னர் மாயவேல் தனது நண்பர்கள் கார்த்திகேயன், சிலம்பரசன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து சேகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இனால் படுகாயம் அடைந்த சேகர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சேகர் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மாயவேல் உட்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.