ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
குழந்தையுடன் கள்ளக்காதலன் வீட்டுக்கு வந்த கள்ளக்காதலி.. திருட்டுக்காதல் ஜோடிகளின் சண்டையால் 2 பிஞ்சுகள், கள்ளக்காதலி கொலை.!
கள்ளக்காதலி அவரின் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு குடும்பம் நடத்த வந்ததால், உல்லாசமாக இருக்க வழியில்லாமல் கள்ளக்காதலன் நடத்திய வெறிச்செயலில் 2 பச்சிளம் பிஞ்சுகள் மற்றும் பெண் கொல்லப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம், ஜெகநாதபுரம் சத்திரம் தெருவில் வசித்து வருபவர் துவார்கா பார். இவரின் மனைவி சுமிதா பார். தம்பதிகள் அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவார்கள். இதே பகுதியில் வசித்து வரும் இளைஞர் கொட்லு.
சுமிதாவுக்கும் - கொட்லுவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் சுமிதா தனது 2 குழந்தைகளோடு கள்ளகாதலனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி கள்ளக்காதல் ஜோடியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற கொட்லு, கள்ளகாதலியின் 2 குழந்தைகளை கொலை செய்து, கள்ளக்காதலியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சோழவரம் காவல் துறையினர், 4 தனிப்படைகள் அமைத்து கொட்லுவை தேடி வருகின்றனர். மேலும், உயிருக்கு போராடிய சுமிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.