மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்பச்சண்டையில் கொலை முயற்சி.. தாயை காக்கவந்த மகளுக்கும் கத்திக்குத்து..! தலைமை காவலர் வெறிச்செயல்.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர், பஜார் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 40). தமிழ்நாடு காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றி வரும் ராஜேந்திரனுக்கு, சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு அதிகாரி பணி வழங்கப்பட்டுள்ளது.
இவரின் மனைவி பூர்ணிமா (வயது 35). தம்பதிகள் இருவருக்கும் பத்மினி (வயது 16), கார்த்திகா (வயது 13), ராஜஸ்ரீ (வயது 10) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜேந்திரன் - பூர்ணிமா இடையே அவ்வப்போது குடும்ப தகராறு நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று மதியமும் வழக்கம்போல இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற ராஜேந்திரன் பூர்ணிமாவை கத்தியால் குத்தியுள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மகள் பத்மினி தாயை காப்பாற்ற முயற்சிக்கவே, அவருக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. படுகாயமடைந்த தாய் - மகள் உயிருக்காக அலறவே, விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றத்தை செய்த ராஜேந்திரன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் தகவலை கூறி சரணடைந்தார்.