மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: மணிக்கட்டை பிளேடால் அறுத்து தலைமைக்காவலர் தற்கொலை... நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்.!
மதுப்பழக்கத்தால் வேலையை இழந்த தலைமை காவலர் மணிக்கட்டை பிளேடால் அறுத்து தற்கொலை செய்துகொண்ட பயங்கரம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூரில் வசித்து வருபவர் யுவராஜ் (வயது 54). இவர் எண்ணூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக கடந்த 1997 முதல் 2019 வரை பணியாற்றி வந்தார். மதுபானம் அருந்தும் பழக்கத்திற்கு அடிமையான யுவராஜ், தினமும் பணிக்கு கூட மதுபோதையில் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
யுவராஜின் செயல் உயரதிகாரிகளின் கவனத்திற்கு செல்லவே, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்து போன யுவராஜ் வீட்டில் தனிமையிலேயே தற்போது வரை இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று அவர் தற்கொலை செய்துகொண்டார்.
வீட்டில் தனியாக இருந்த யுவராஜ் மணிக்கட்டை அறுத்து இரத்தம் வழிந்தோடிய நிலையில் தற்கொலை செய்துள்ளார். அண்டை வீட்டில் இருப்பவர் எதற்ச்சையாக யுவராஜை பார்க்கச்சென்றபோது உயிர் ஊசலாடியுள்ளது. அவரை காப்பாற்ற மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துள்ளது.
இதனையடுத்து, மீஞ்சூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் யுவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.