அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
பெற்றோர்களே உஷார்.. "இல்லம் தேடி கல்வி" வகுப்பிற்கு சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்..! மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்ட பகீர் சம்பவம்..!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாதிரைமங்களம் பகுதியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான கீத்து கொட்டகையில் "இல்லம் தேடி கல்வித் திட்டம்" என்ற கல்விக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சந்துரு, நிஷ்வந்த், யஷ்வந்த் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய சிறுவர்கள் வகுப்பிற்கு விளையாடிக்கொண்டே சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்திருந்த கம்பி வேலியை சிறுவர்கள் தொட்ட நிலையில், நால்வரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதனை கண்ட அருகிலிருந்த கிராம மக்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிறுவர்கள் தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.