தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
18 வயதாகியும் பேரனுக்கு ஊட்டிவிடும் பாட்டி; செல்போன் இல்லாமல் துரை சாப்பிட மாட்டாராம்.!
தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் நம்மை சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே அதன் அடிமைகளாக மாற்றி விட்டது.
எங்கு சென்றாலும் செல்போனும் கையுமாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இருக்கிறார்கள். இன்றுள்ள குழந்தைகள் பெரியவர்களை போல செல்போனை உபயோகம் செய்கிறது.
2 முதல் 3 வயதாகும் குழந்தைகள் கூட செல்போன் கேட்டு அடம்பிடித்து வருகிறார்கள். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பாட்டி பேரனுடன் சாப்பிட அமர்ந்தார்.
இருவரின் இலையில் உணவுகள் வைக்கப்பட்ட நிலையில், பேரன் தனது கைகளில் செல்போனை வைத்து உபயோகம் செய்கிறார். பாட்டி பேரனுக்கு உணவு ஊட்டிவிடுகிறார்.
இதனைக்கண்ட பலரும் மூதாட்டியிடம் என்ன? என விசாரிக்க, அவரோ பேரன் செல்போன் இல்லாமல் சாப்பிடமாட்டார் என கூறுகிறார். அந்த பேரன் 12ம் வகுப்பு பயிலும் மாணவர் என்பது தான் இதில் சோகமான தகவல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நமது வசதிக்காக படைக்கப்பட்ட தொழில்நுட்ப சாதனைகளுக்கு நாம் அடிமையாக இருந்தால் என்ன மாதிரியான விபரீதமும் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்பதற்கான சிறு சாட்சியே இந்த சம்பவம் என நெட்டிசன்கள் சுட்டிக்காண்பிக்கின்றனர்.