திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கோயில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் பலி... அரக்கோணத்தில் சோகம்...!
அரக்கோணத்தில் கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.
அரக்கோணம், நெமிலி தாலுகா கீழவீதி கிராமத்தில் உள்ள மண்டியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியில் எதிர் பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் பூபாலன் (40), முத்துகுமார் (39), ஜோதிபாபு (19) ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எட்டுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை புன்னை மருத்துவமனைக்கும் மற்றும் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
இன்னும் சிலருக்கு முதலுதவி அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நெமிலி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் திருவிழாவின் போது விபத்து நடந்தது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.