96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
5 பேர் கும்பலால் லாரி ஓட்டுநர் அடித்தே கொலை.. சண்டையை கண்டித்ததால் பயங்கரம்..!
பெட்ரோல் போட சென்ற இடத்தில் நடந்த சண்டையை தட்டிக்கேட்ட லாரி ஓட்டுநர் 5 பேர் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி, சாத்தன்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் கலைச்செல்வன் (வயது 33). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட பணகுடி ஊருக்குள் உள்ள பங்குக்கு சென்றுள்ளார்.
அப்போது, பெட்ரோல் பங்கில் 5 பேர் கொண்ட கும்பல், பங்க் ஊழியர்களிடம் தகராறு செய்துகொண்டு இருந்தது. இதனைக்கண்ட கலைச்செல்வன் 5 பேர் கும்பலை தட்டிகேட்கவே, ஆத்திரமடைந்த கும்பல் கலைச்செல்வனை கடுமையாக தாக்கி இருக்கிறது.
இதனால் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிய நிலையில், அப்பகுதி வழியே வந்த பொதுமக்கள் கலைச்செல்வனை மீட்டு சிகிச்சைக்கு பணகுடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடத்திலேயே கலைச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பணகுடி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர், பணகுடி காலனியை சேர்ந்த மனிஷ் ராஜா, ஆட்டோ குமார், பாலசுப்பிரமணியன், சிவா ஆகிய 4 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாணிக்கராஜாவுக்கு வலைவீசப்பட்டுள்ளது.