மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
68 வயது தொழிலதிபரை, இளம் கள்ளக்காதலனுடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய தேவி.. நெல்லையில் பகீர்.!
வயதான காலத்தில் இளம்பெண்ணுடன் ரகசிய குடித்தனம் நடத்தி வந்த தொழிலதிபர், இளம்பெண்ணின் இளம் கள்ளகாதலனால் போட்டுத்தள்ளப்பட்டார். கள்ளக்காதல் எப்படியான சோகத்தை பரிசாக தரும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
திருநெல்வேலியில் உள்ள பேட்டை, அபிஷேகப்பட்டி நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த கட்டுமான அதிபர் ஜேக்கப் ஆனந்த். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டவாறு சடலமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக தேவி என்பவரிடம் நடந்த விசாரணையில் பல பரபரப்பு தகவல் வெளியானது.
பேட்டையில் வசித்து வந்த தேவியின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால், அவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விட்டுவிட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனையடுத்து, சமுசிகாபுரத்தில் பரதநாட்டியபள்ளியில் சேர்ந்த தேவி தனது மாஸ்டர் மற்றும் அவரது மகன் பிரின்ஸை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார்.
இவர்களுடன் தனித்தனியே தேவி உல்லாச வாழ்க்கையில் இருந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் மாஸ்டரின் வீட்டாருக்கு தெரியவந்த காரணத்தால் தேவியை விரட்டியடித்துள்ளனர். அதன்பின் தேவி நரசிங்கநல்லூருக்கு வந்த நேரத்தில் தொழிலதிபர் ஜேக்கப் ஆனந்தோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
63 வயதாகும் ஜேக்கப் ஆனந்துடன் தேவி உல்லாசமாக இருந்து வந்த நிலையில், அவருக்கு ரகசியமாக வீடு எடுத்து கொடுத்து குடித்தனமும் நடத்தி வந்துள்ளார். அதேபோல, ஜேக்கபிடம் இருந்து பணம் வாங்கி சொந்த வீடும் தேவி கட்டி வந்துள்ளார். தேவியிடம் இருந்து பிரிய மனமில்லாத பிரின்ஸ் அவ்வப்போது அவரை நேரில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இவ்வாறாக கடந்த சில நாட்களுக்கு முன் தேவியை நேரில் சந்திக்க வந்த பிரின்ஸ் உல்லாசத்திற்கு அடிபோட, அப்போது ஜேக்கப் வந்துள்ளார். இதனால் பதறிப்போன பிரின்ஸ் சமயலறையில் தஞ்சம் புக, வீட்டில் யாரும் இல்லை என்ற எண்ணத்தில் தேவியுடன் கூடுவதற்கு ஜேக்கப் செயலாற்றியுள்ளார்.
அவரின் பிடியில் இருந்து விலக நினைத்த தேவி, ஜேக்கப்பை தள்ளிவிட்டபோது அவர் கீழே விழுந்து மயங்கி உயிரிழந்துள்ளார். ஜேக்கப்பின் உடலை கட்டிலுக்கு அடியில் வைத்துவிட்டு, கள்ளக்காதல் ஜோடி அவரது காரை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று உல்லாசமாக இருந்துள்ளது.
இறுதியாக ஜேக்கப்பின் குடும்பத்திடம் இருந்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது காவல் துறையினரால் தேவி மற்றும் பிரின்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.