மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: நடுரோட்டில் புகைவிட்ட இ-ஸ்கூட்டர்.. சுதாரித்ததால் தப்பிப்பு.. பகீர் வீடியோ.. திருப்பூரில் பரபரப்பு சம்பவம்.!
அவிநாசி அருகே இ-ஸ்கூட்டரின் பேட்டரி புகைவிட்ட நிலையில், சுதாரித்ததால் அது முழுவதும் தீக்கு இரையாகாமல் தப்பித்தது.
கடந்த சில வருடமாகவே எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மக்கள் மாற தொடங்கியுள்ள நிலையில், அது அவ்வப்போது நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்து விபத்திற்குள்ளாகி வருகிறது. இதனால் மக்களிடம் இ-ஸ்கூட்டர் விவகாரத்தில் பெரும் சந்தேகமும், பயமும் நிலவி வருகிறது.
இதுகுறித்து வல்லுனர்களிடம் கேட்டால், இ-ஸ்கூட்டர் சார்ஜிங் விவகாரத்தில் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். அதனால் கூட பேட்டரி சூடாகி தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் நடுரோட்டில் இ-ஸ்கூட்டர் பேட்டரி புகை விட தொடங்கியுள்ளது. அப்போது, அருகில் இருந்தவர் சுதாரித்து பேட்டரியை வெளியே எடுத்துள்ளார். இதனால் மொத்த வாகனமும் தீக்கு இரையாகாமல் தப்பித்தது.