மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலையோரம் இருந்த சூட்கேசில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு.. தமிழகத்தை அதிரவைத்த பகீர் சம்பவம்.!
கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், கொலையாளியை கண்டறிய 4 தனிப்படை திருப்பூர் காவல் துறையினரால் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், புதுநகர் ஒத்தக்கடை பகுதியில் சாலையோரம் உள்ள சாக்கடையில் சூட்கேஸ் இருந்துள்ளது. மேலும், அதில் இரத்த கரையும் இருந்ததால், பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சூகேட்ஸை திறந்ததில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம் இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, உடலை கைப்பற்றிய அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பெண்ணின் சடலத்தில் கால்களில் மெட்டி இருப்பதால், அவர் திருமணம் ஆன பெண் என்பதை உறுதி செய்துள்ளனர்.
பெண்ணை வேறொரு இடத்தில் வைத்து கொலை செய்து, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சூட்கேஸ் வீசப்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கொலையாளிகளை கைது செய்ய 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.