தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
திருப்பூர்: காட்டுப்பகுதியில் குடிக்க சென்ற இளைஞர் தலைதுண்டித்து கொலை.. வழிப்பறி கும்பல் பகீர் செயல்.! தமிழகமே அதிர்ச்சி.!!
5 பேர் வழிப்பறி கும்பலால் நண்பருடன் மதுபானம் அருந்த சென்ற இளைஞர், தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தலாம், போனேரிராஜபுரம் வைக்கில் கீழத்தெருவில் வசித்து வருபவர் மகாலிங்கம். இவரின் மகன் சதீஷ் குமார் (வயது 23). சதீஷுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருப்பூர் - அவிநாசி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார்.
இவருடன், திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் வசித்து வரும் தனபால் என்பவரின் மகன் ரஞ்சித் (வயது 22) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக திருப்பூர் பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, அங்கேயே தங்கியுள்ளனர்.
பின்னர், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளின் இரவு நேரத்தில், இருவரும் செரங்காடு கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு மதுபானம் அருந்த சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த 5 பேர் கொண்ட வழிப்பறி கும்பல், இருவரையும் தாக்கி பணம் மற்றும் செல்போனை கேட்டுள்ளது. இருவரும் மறுப்பு தெரிவித்ததால், 5 பேர் கொண்ட கும்பல் நண்பர்களை சரமாரியாக தாக்கியுள்ளது.
ரஞ்சித் மட்டும் எப்படியோ தப்பியோடிவிட, சதீஷ் குமார் 5 பேர் கும்பலிடம் சிக்கியுள்ளார். சதீஷ் குமாருக்கு போனில் தொடர்பு கொண்ட ரஞ்சித் காப்பாற்ற வருமாறு அழைக்கவே, பதற்றத்தில் தப்பி வந்த ரஞ்சித் நண்பனை காப்பாற்ற சென்றுள்ளார். அங்கு வந்த ரஞ்சித்தை கடுமையாக தாக்கி, வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளது.
இரத்த வெள்ளத்தில் தப்பித்து வந்த ரஞ்சித் தனியார் நிறுவனம் முன்பு விழுந்துவிட, அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ரஞ்சித்தை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க, காவலர்களிடம் நண்பர் சதீஷ் குமார் 5 பேர் கும்பலிடம் சிக்கியிருப்பதை தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, காவல் துறையினர் ரஞ்சித் கூறிய இடத்திற்கு சென்ற போது, அங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில், சதீஷ் குமார் பிணமாக இருந்துள்ளார். மேலும், தலையை மட்டும் கும்பல் தங்களுடன் எடுத்து செல்ல, காவல் துறையினர் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சதீஷ் குமாரின் தலையை அதிகாரிகள் தொடர்ந்து தேடி வரும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக நல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.