சிறுமிகளின் ஆடையை களைந்து மருத்துவ பரிசோதனை.. திருப்பூர் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்.! 



Tiruppur Kunnathur Medical Scheme Minor Girl Naked by Doctor Parents Protest at School 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர், கருமஞ்சிறை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப்பள்ளியில் மத்திய அரசின் சீர்மிகு திட்டத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், பள்ளியில் பயின்று வந்த 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ - மாணவியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. 

இந்நிலையில், மருத்துவ பரிசோதனை நிறைவடைந்த மறுநாளில், பள்ளிகளில் பயின்று வரும் சில மாணவிகள், நாங்கள் பள்ளிக்கு செல்லமாட்டோம் என்று பெற்றோரிடம் கூறியுள்ளனர். பெற்றோர்கள் விசாரித்த போது, பள்ளியில் ஆண் மருத்துவர் உடல் முழுவதும் பரிசோதனை செய்ததாகவும், பள்ளிக்கு செல்ல ஒருமாதிரி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாணவிகளுடன் பள்ளிக்கு சென்று, பிற மாணவிகளையும் வகுப்பறைக்கு அனுப்ப இயலாது என்று கூறி முற்றுகைப்போராட்டம் நடத்தவே, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த குன்னத்தூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து பெற்றோரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

Tiruppur

மேலும், விசாரணையில் பெற்றோர்களுக்கு தெரியாமல் மருத்துவ பரிசோதனை நடந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில், பெண் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் ஆண் மருத்துவர் சிறுமிகளின் ஆடையை களைந்து மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. 

சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப இயலாது என்று பெற்றோர்கள் கூறிவிட்டு களைந்து சென்றதால், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கும் புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவிக்கையில், பெண் செவிலியர், பள்ளி ஆசிரியர்கள் இருக்கும் போது தான் பரிசோதனை நடந்தது. 

எவ்விதமான குற்றச்சம்பவங்களும் நடக்கவில்லை. பெற்றோர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டின்படி எந்த தவறும் நடக்கவில்லை என்றாலும், விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தவறுகள் நடந்திருந்தால் மருத்துவரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.