#Breaking: பணிந்தது மத்திய அரசு., ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின்.!



TN CM MK Stalin on Tungsten Mine 


மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், அரிட்டாபட்டி பகுதியில் கிட்டத்தட்ட 5000 ஏக்கர் பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த விசயத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

மேலும், அரசுத்துறை சார்பில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல முறையீடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, முதல்வர் முக ஸ்டாலின், "நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் அமையாது. அவ்வாறு டங்க்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் நான் பொறுப்பில் இருக்கமாட்டேன்" எனவும் ஆவேசமாக தெரிவித்து இருந்தார். 

சுரங்க ஏலம் ரத்து

இதனிடையே, இன்று டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான ஏலம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் கருத்தை பகிர்ந்து இருக்கிறார். 

இதையும் படிங்க: #Breaking: புதிய வரலாறை எழுதப்போகும் தமிழினம்.. தமிழக மக்களுக்கான அறிவிப்பு.. வெளியிட்டார் முக ஸ்டாலின்..! 

MK Stalin

மத்திய அரசு பணிந்தது

இதுகுறித்த எக்ஸ் பதிவில்,"நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன் சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின்  உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது!

அதிமுகவுக்கு கோரிக்கை

இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது!" என கூறியுள்ளார். 

இந்த பதிவின் வாயிலாக தமிழ்நாடு முதல்வர் மத்திய அரசுக்கு எதிரான வாதத்தை முன்வைத்துள்ளதோடு, அதிமுகவின் செயல்பாடுகளையும் கண்டித்து கூறி இருக்கிறார். 


 

இதையும் படிங்க: #Breaking: "நாளை முக்கிய அறிவிப்பு" - தமிழ்நாடு முதல்வர் கொடுத்த சஸ்பென்ஸ்.. எதிர்பார்ப்பில் தமிழர்கள்.!