மக்களே உஷார்!! ஓட்டு போட்டபின் இப்படி ஒரு பொய் கூறினால் 6 மாதம் சிறை தண்டனை!! தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..



TN election rules for voters about evm machine

வாக்களித்த பின் வேறு சின்னம் தெரிவதாக பொய் கூறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகமே வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் தேர்தல் அன்று வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதவாது வாக்களிக்கும் நபர், தனது வாக்கை பதிவு செய்தவுடன், அவர் யாருக்கு அல்லது எந்த சின்னத்திற்கு வாக்களித்தார் என்ற விவரம் அச்சாவதை, பார்வையிடும் வசதி கொண்ட, வி.வி.பி.ஏ.டி., இயந்திரம் அனைத்து வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ளது.

TN Election 2021

வாக்காளர் ஓட்டளித்த பின், தான் யாருக்கு வாக்களித்தமோ அவரது பெயரோ அல்லது சின்னமோ தெரியாமல், வேறொரு நபரின் பெயர் அல்லது சின்னம் வி.வி.பி.ஏ.டி., இயந்திரத்தில் தெரிகிறது என்று கூறினால், உடனே அந்த நபரிடம், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், உரிய படிவத்தில் புகார் பெறவேண்டும்.

பின்னர் பின், ஓட்டுச்சாவடி முகவர்களுடன், ஓட்டளிக்கும் பகுதிக்கு சென்று, அந்த நபரை மீண்டும் முகவர்களுக்கு முன்பாக, ஒரு ஓட்டு பதிவு செய்ய, அனுமதிக்க வேண்டும். அந்த நபர், யாருக்கு ஓட்டளித்தார் என்பதை, 17ஏ படிவத்திலும், 17 சி படிவத்திலும் பதிவு செய்ய வேண்டும்.

அவர் மீண்டும் வாக்களிக்கும் போது சரியாக வந்தால் குறிப்பிட்ட வாக்காளர் வேண்டுமென்றே பொய் கூறி தவறான புகாரை கொடுத்ததாக கருதி, அவரை உடனே போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர் அந்த நபருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை அல்லது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். அல்லது இரண்டும் சேர்ந்து அனுபவிக்க நேரிடும்.

ஒருவேளை அந்த வாக்காளர் கூறியதுபோலவே அவர் பதிவிட்ட சின்னம் அல்லது வேட்பாளரின் விவரம் மாறி தோன்றினாள் ஓட்டுப்பதிவை ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் நிறுத்த வேண்டும். மேலும் இதுகுறித்து உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

எனவே வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க செல்லும்போது இதுபோன்ற விஷயங்களில் முன்னெச்செரிக்கையுடன் நடந்து தேவை இல்லாத பிரச்சனைங்களை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.