உயருகிறது மின்கட்டணம்? தமிழக மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.!



tneb-price-may-hike

 

தமிழ்நாட்டில் 2022 - 2023ம் ஆண்டு மின்கட்டணம் உயர்த்தி அறிவிப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தற்போது மீண்டும் ஜூலை 01ம் தேதி முதல் மின் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படும் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே ரூ.1.60 இலட்சம் கோடி கடனுடன் நிதி நெருக்கடியால் தவித்து வருகிறது. இதனால் வரும் 4 ஆண்டுகளுக்கு அடுத்தடுத்து மின்கட்டணத்தை உயர்த்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது. 

இதையும் படிங்க: ஹாய் அனுப்பாதீங்க; வேண்டுகோள் வைத்த தமிழ்நாடு மின்சார வாரியம்..! காரணம் இதுதான்..!

மின்கட்டணம் உயர வாய்ப்பு?

இந்நிலையில், ஜூலை 01 ம் தேதி முதல் மீண்டும் மின்கட்டணம் உயரலாம் எனவும், அதன்படி வரும் மாதத்தில் 6% மின் கட்டணமானது உயர்வை சந்திக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. 

ஏற்கனவே இலவச மின்சாரம் ரத்தகுமா? ஒரு நபருக்கு ஒரேயொரு வீட்டில் மட்டுமே 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் திடீரென அமலாகுமா? என பல்வேறு கேள்விகளுடன் மக்கள் பரிதவித்து வருகின்றனர். 

இதுகுறித்த தகவல் முன்னே வெளியாகி அதிர்ச்சியை தந்த நிலையில், மின்சார வாரியம் அதுசார்ந்த அறிவிப்புகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தற்போது மீண்டும் மின்கட்டணம் உயர்வு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ரூ.8 இலட்சம் மின் கட்டணத்தால் அதிர்ந்துபோன விவசாயி; அதிகாரிகள் தந்த விளக்கம்.!