தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
நாளை தை திருநாளில் பொங்கல் வைக்க உகந்த நேரம்... தெரிந்து கொள்வோம்..!!
சூரியனுக்கு நன்றி செலுத்த, தை மாதம் முதல் நாள் தமிழக மக்களால் கொண்டாடப்படுவது தை பொங்கல் திருநாள்.
தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகையே தைப்பொங்கல் திருநாள் ஆகும். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பாகும். மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகின்றனர்.
இந்த வருடம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகின்றது. இதன்படி இந்த வருடம் தை திருநாளில் பொங்கல் வைக்க உகந்த நேரத்தை தெரிந்து கொள்ளலாம்.
நாளை தை திருநாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 7.45 முதல் 8.45 வரை.
நல்ல நேரம் காலை 07.30 மணி முதல் 08.30 வரை. மாலை 03.30 முதல் 04.30 வரை.
கெளரி நல்ல நேரம் காலை 10.30 முதல் 11.30 வரை.
எமகண்டம்; பகல் 12 முதல் 01.30 வரை. ராகு காலம்; மாலை 04.30 முதல் 6 வரை.
மாட்டுப் பொங்கல் ஜனவரி 16-ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
காலை 06.30 முதல் 07.30 வரை. மாலை 04.30 முதல் 05.30 வரை மாட்டுப் பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரமாக உள்ளது.