#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யாரும் பார்த்திராத தமிழக பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள்!
இன்று உலகம் முழுவதும் குழந்தையர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம். குழந்தையும் தெய்வமும் ஓன்று என்பார்கள். அந்த அளவிற்கு குழந்தைகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இன்று நம்மில் பலருக்கும் மீண்டும் நமது குழந்தை பருவத்திற்கு செல்லவேண்டும் என்ற ஆசைகூட இருக்கும்.
இந்நிலையில் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் நாம் நம் தமிழகத்தின் பிரபலமான அரசியல் மற்றும் அரசியலுக்கு வந்துருக்கும் நடிகர்களின் சிறுவயது புகைப்படங்களைத்தான் இங்கே காண உள்ளோம்.
1. அப்துல்கலாம்
ஐயா அப்துல்கலாம் தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். இவரது தலைமையில்தான் இந்தியா அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக முடித்தது. மேலும் இந்திய குடியரசு தலைவராக இருந்து இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர் ஐயா அப்துல்கலாம் அவர்கள்.
2. MGR
அதிமுகவின் முன்னாள் தலைவர் புரட்சி தலைவர் MGR அவர்கள். ஒரு சாதாரண நடிகனாக தனது வாழக்கை பயணத்தை ஆரம்பித்த நமது MGR அவர்கள் இன்றும் ஒரு சிறந்த முதல்வராக நமது இதயத்தில் நீங்க இடம் பெற்றிருக்கிறார்.
3. கலைஞர் கருணாநிதி
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி. வசனம், கதை, கட்டுரை எழுதுவதில் மிக சிறந்த ஒரு மனிதர் ஐய்யா கலைஞர் அவர்கள். திமுக தலைவராக இருந்த இவர் பலமுறை தமிழக முதல்வராக ஆட்சி செய்துள்ளார்.
4. ஜெயலலிதா
மறைந்த நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஒரு சினிமா நடிகையாக இருந்து பின்னர் தமிழக அரசியலின் அசைக்க முடியாத சக்தியாக மாறியவர்.
5. ரஜினிகாந்த்
இந்திய சினிமாவின் அடையாளம் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். சாதாரண ஒரு பஸ் கண்டக்டராக தனது வாழ்க்கையை தொடங்கி இவர் இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்.
6. கமல்காசன்
குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகர் கமல் உலக நாயகனாக, மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவராக வளர்ந்து நிற்கிறார்.