#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிம்புவின் சகோதரர் மதம் மாற்றம்; மதங்கள் குறித்து டி.ஆர் கூறிய கருத்து!
தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமையாளராக, மிகப்பெரிய வெற்றிப் படங்களைத் தந்தவர் டி.ராஜேந்தர். இவரது மூத்த மகன் நடிகர் சிம்பு. இளைய மகன் குறளரசன், சிம்பு நடித்த இது நம்ம ஆளு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இந்நிலையில், தன் பெற்றோர் சம்மதத்துடன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மெக்கா மசூதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டி ராஜேந்தர் ``குறளரசனுக்கு சிறு வயதிலிருந்தே இஸ்லாம் மார்க்கத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார். தற்போது, இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். நானும் அனைத்து மதத்துக்கும் பொதுவானவன்.
நான் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி கோயில், முருகன் கோயில் என அனைத்து ஸ்தலத்துக்கும் செல்வேன். எனது தஞ்சை சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் எம்ப்ளத்தை கூட அனைத்து மதத்தின் குறியீடுகளும் கொண்டுதான் வடிவமைத்தேன்’’ என்று கூறியுள்ளார்.