மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோயிலுக்கு சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்... பெற்றோருடன் உறங்கிய பெண் குழந்தை கடத்தல்... போலீசார் வலைவீச்சு..!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர் பகுதியில் உள்ள கடற்கரையில் தங்கி தினக்கூலி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை அன்று இரவு குடும்பத்துடன் உறங்கி உள்ளனர். இதனையடுத்து அதிகாலை குழந்தையின் தாய் எழுந்து பார்த்தபோது குழந்தை முத்துப்பேச்சி அருகில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அக்கம் பக்கத்தில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
இதனால் பதறிப்போன குழந்தையின் பெற்றோர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். மேலும் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.