மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொள்ளிடம் ஆற்றில் மண்ணரிப்பு; மின் கோபுரம் சாய்ந்து விழ வாய்ப்பு... மீட்பு பணிகள் தீவிரம்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம், நேப்பியர் பாலம் பகுதியில் ராட்சத மின் கம்பிகள் செல்கின்றன. மின் கம்பிகளை மின் கோபுரங்கள் உதவியுடன் இணைந்திருந்த நிலையில், தற்போது காவேரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் ராட்சத மின் கோபுரத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, மின்கோபுரம் சாய்ந்து வருகிறது. மின் கோபுரம் எந்நேரமும் விழலாம் என எதிர்பார்க்கப்பட்டதையடுத்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மின்சாரம் துண்டிப்பு
இதனையடுத்து, உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், திருவானைக்காவல் - ஸ்ரீரங்கம் வழித்தடத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாற்றி விடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கட்டிங் போதையில் அயர்ந்து உறங்கிய ஆசாமி; கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் கதறிய பரிதாபம்..!
மின்வாரிய அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து ராட்சத மின் கோபுரங்களில் உள்ள மின் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தேசிய நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ள காரணத்தால், சென்னை - திருச்சி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கோபுரம் சாய்ந்து விழ வாய்ப்புள்ள பகுதி குடியிருப்பில் இருக்கும் மக்கள் முன்னதாகவே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்,
இதையும் படிங்க: வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவரகம்; பெண் கைது, குழந்தை மீட்பு.!