மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு தொகுதி கேட்டு திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை - த.வா.க தலைவர் வேல்முருகன்.!
2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக திமுக கூட்டணிக்கட்சிகள் தொடர்ந்து தங்களின் தலைமை கட்சியான திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்று த.வா.க கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழு திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
அதனைதொடர்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வேல்முருகன் பேசுகையில், "தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரு தொகுதி கேட்டு திமுக நாடாளுமன்ற குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தலைமைக்காக ஓடோடி பல இடங்களில் பிரச்சாரம் செய்துள்ளேன். அதன்பேரில், நாடாளுமன்றத்திலும் நமது கட்சியின் சார்பில் குரல் ஒலிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அல்லது பின்பு தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். தமிழ்நாட்டில் எந்த தொகுதி கொடுத்தாலும் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை எதிர்கொள்வேன். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக திமுக நாடாளுமன்ற பணிக்குழு தெரிவித்துள்ளது" என கூறினார்.