மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்தோ பரிதாபம்..! மில்க் ஷேக் ஆர்டர் செய்தவருக்கு சிறுநீர் டெலிவரி: குடித்துப்பார்த்து கதறிய இளைஞர்.!
அமெரிக்காவில் உள்ள உட்டாஹ் மாகாணம், உட்டா பகுதியை சேர்ந்தவர் Caleb Woods. இவர் சம்பவத்தன்று ஆன்லைன் வழியே மில்க் ஷேக், பிரென்ச் ப்ரைஸ் ஆர்டர் செய்துள்ளார்.
அவருக்கு டெலிவரி செய்பவர், ஆர்டர் செய்த பொருட்களையும் வழங்கி இருக்கிறார். வூட்ஸ் மில்க் ஷேக்கை எடுத்து குடித்தபோது, அதன் சுவை மாறி இருக்கிறது.
மில்க் ஷேக்கை திறந்து பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சியாக மனித சிறுநீர் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ந்துபோன அவர், உடனடியாக டெலிவரி செய்யும் நபருக்கு தொடர்புகொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளார்.
பதறிப்போன அவரும், தான் கடந்த பலமணிநேரமாக இடைவெளியின்றி உழைத்து வருவதால், சிறுநீர் கூட கழிக்க இயலவில்லை. எனது காரில் இருந்த டின்னில் சிறுநீர் கழித்து வைத்திருந்தேன். அடுத்த ஆர்டர் டெலிவரி செய்யப்போகும் அவசரத்தில் அதனை மாற்றி கொடுத்துவிட்டேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து, உணவு டெலிவரி நிறுவனத்திடம் முறையிட்டபோது, அவர்கள் உணவு ஆர்டர் செய்த பணத்தில் பாதி தொகையை கொடுத்துள்ளனர். விரக்தியடைந்த வூட்ஸ், சமூக வலைத்தளத்தில் தகவலை பகிர்ந்தார்.
விசாரணை நடத்திய உணவு டெலிவரி நிறுவனம், சம்பந்தப்பட்ட நபரை பணியில் இருந்து நீக்கியது. மேலும், அவரின் செயலுக்கு மன்னிப்பும் கேட்டது.